பதிவு செய்த நாள்
06
ஆக
2014
11:08
புதுச்சேரி: ஆலங்குப்பம் அன்னை நகர் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடக்கிறது.உழவர்கரை நகராட்சி ஆலங்குப்பம் அன்னை நகரில் விநாயகர், முருகன், முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் திருப்பணி கள் முடிந்து, கும்பாபிஷேக விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவையொட்டி, நேற்று மாலை 5.௦௦ மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், மாலை 6.00 மணிக்கு, முதல் கால யாகவேள்வி பூஜை, விசேஷ திரவிய ஹோமம் நடந்தது. இன்று 6ம் தேதி காலை 9.00 மணிக்கு, இரண்டாம் கால யாக சாலையும், மாலை 5.00 மணிக்கு மூன்றாம் கால யாக வேள்வி பூஜை நடக்கிறது. நாளை 7ம் தேதி காலை 7.30 மணிக்கு கோ பூஜை, நான்காம் கால யாகவேள்வி நடக்கிறது. காலை 9.45 மணிக்கு விமான கலசம் கும்பாபிஷேக விழா மற் றும் மூலவர் கும்பாபிஷேக விழா நடக்கிறது.