காரைக்கால்: காரைக்கால் வடமறைக்காடு கீரைத்தோட்டத்தில் உள்ள சிங்கமுக புற்று மாரியம்மன் கோவிலில், 14ம் ஆண்டு ஆடித்திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது.இதில், 100க்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு, விளக்கேற்றி வழிபட்டனர். சந்தனக்காப்பு அலங்கரத்தில் அம்மன் அருள்பாலித்தார். அதனை தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடந்தது. திருமுருகன் எம்.எல்.ஏ., உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனார்.