காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் சனிக்கிழமை சிறப்பு திருமஞ்சனம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18அக் 2025 11:10
காரமடை; புரட்டாசி மாத ஐந்தாம் சனிக்கிழமை வைபவம் காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று நடந்தது . மூலவர் ரங்கநாதருக்கு அதிகாலையில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இதில் பால் தயிர் தேன் நெய் சந்தனம் மஞ்சள் இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ரங்கநாதர் வெள்ளி சப்பரத்தில் வெண் பட்டு குடை சூழ மேல தாளம் முழங்க கோவிந்தா கோவிந்தா கோஷங்களுடன் திருக்கோவில் வளாகத்தில் வளம் வந்து திருக்கல்யாண மண்டபத்தை அடைந்தார். அங்கு திருவாராதனம்,வேத விண்ணப்பம் மந்திர புஷ்பம் அஷ்டோத்திரம் சாற்றுமறை சேவிக்கப்பட்டு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்த வைபவத்தில் திருக்கோவில் ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள், மிராசுதாரர்கள், அறங்காவலர்கள், திருக்கோவில் செயல் அலுவலர் மற்றும் நிர்வாகத்தினர் ஸ்ரீபாதம் தாங்கிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.