Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மடப்புரம் கோயிலில் சேலை ஏலம், போட்டி ... திருமூர்த்திமலைப்பகுதிகளில் மழை அருவிக்கு செல்ல தடை; தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதி திருமூர்த்திமலைப்பகுதிகளில் மழை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் மேல்மலையனுாரில் டி.ஐ.ஜி., ஆய்வு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் மேல்மலையனுாரில் டி.ஐ.ஜி., ஆய்வு

பதிவு செய்த நாள்

18 அக்
2025
07:10

செஞ்சி: மேல்மலையனுாரில் நடக்க உள்ள அமாவாசை ஊஞ்சல் உற்சவத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.ஐ.ஜி., ஆய்வு செய்தார்.


விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடக்கும் அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்த நாளில் கடும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. அதேபோல கோவில் பகுதியில், பக்தர்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படுவது கிடையாது. இதனால் கடந்த பல ஆண்டுகளாக மேல் மலையனுாருக்கு வரும் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில், இந்த மாதம் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் வரும், 21ம் தேதி நடக்க உள்ளது. தீபாவளி பண்டிகை நேரம் என்பதால் வழக்கத்தை விட அதிக பக்தர்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது.


இதையொட்டி மேல்மலையனுாரில் ஊஞ்சல் உற்சவத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., உமா, எஸ்.பி., சரவணன் ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். ஊஞ்சல் உற்சவம் நடக்கும் ஊஞ்சல் மண்டபம், பக்தர்கள் நிற்கும் இடம், கோவில் பிரகாரம், தற்காலிக பஸ் நிலையம், பக்தர்கள் வந்து செல்லும் வழிகள் மற்றும் பக்தர்கள் அதிகம் குவியும் இடங்களை பார்வையிட்டனர். விழாவின் போது செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையருடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆய்வின் போது டி.எஸ்.பி., ரமேஷ் ராஜ், இன்ஸ்பெக்டர் வினிதா, தாசில்தார் தனலட்சுமி, அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை மற்றும் அறங்காவலர்கள் கோவில் பணியாளர்கள் உடன் இருந்தனர். 


கரூர் கூட்ட நெரிசல் எதிரொலி; பொதுவாக இது போன்ற விழாக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடு, அடிப்படை வசதிகள் செய்வது குறித்து விழுப்புரத்தில் தான், ஆலோசனை கூட்டம் நடத்துவர். ஆனால், கரூரில் கூட்ட நெரிசலில், 41 பேர் இறந்த சம்பவத்திற்கு பிறகு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்த துவங்கி உள்ளனர். இந்நிலையில், தற்போது போலீஸ் டி.ஐ.ஜி., எஸ்.பி., உள்ளிட்டோர் மேல்மலையனுாரில் ஆய்வு நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar