பதிவு செய்த நாள்
06
ஆக
2014
12:08
செஞ்சி: மீனம்பூர் சுந்தரவிநாயகர் கோவிலில் கும்பாபிஷே விழா கொடியேற்றத்துடன் நேற்று
துவங்கியது. செஞ்சி தாலுகா மீனம்பூர் கிராமத்தில் உள்ள சுந்தரவிநாயகர் கோவிலின் திருப்பணிகள் முடிந்து வரும் 14ம் தேதி மகா கும்பாபிஷேகம் செய்ய உள்ளனர். நேற்று காலை 5 மணிக்கு கணபதி பூஜையுடன் கொடியேற்றமும், காப்பு அணிவித்தலும் நடந்தது. தொடர்ந்து வரும் 13ம் தேதி காலை 10 மணிக்கு கணபதி ஹோமம், முதல் கால யாகசாலை பூஜைகளும், மாலை 5 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், கணபதி பூஜை, பிரவேச பலி, கலச பூஜையும், இரவு 9 மணிக்கு யந்திர பிரதிஷ்டை மற்றும் அஷ்டபந்தனம் சாற்றுதலும் செய்ய உள்ளனர். மறுநாள் (14ம் தேதி) காலை 6 மணிக்கு கோ பூஜை, கணபதி மூலமத்திர ஹோமம், தம்பதி பூஜை, தத்துவார்ச்சனை, மகா பூர்ணாகுதி, மகா தீபாராதனையும், 8.15 மணிக்கு கடம் புறப்பாடும், 8.40 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் செய்ய உள்ளனர். விழா ஏற்பாடுகளை மீனம்பூர் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.