மயிலம்: மயிலம் முத்து மாரியம்மன் கோவிலில் ஆடித் திருவிழா நடக்கிறது. மயிலம் மயைடிவாரத்திலுள்ள மாரியம்மன் கோவிலில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு ஜூலை 29ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு அபிஷேகம், தீபாரனை, வழிபாடுகள் நடந்து வருகிறது. இன்று (5ம் தேதி) பிற்பகல் 1.00 மணிக்கு கோவில் வளாகத்தில் சாகை வார்த்தல் நடக்கிறது. மாலை 6 மணிக்கு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரவு 9 மணிக்கு அம்மன் வீதியுலா நடக்கிறது.