Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

எண்ணத்தில் நலமிருந்தால் இன்பமே ... சூரியனின் வெப்பமும், அக்னியின் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஓர் அபூர்வ ஆன்மிகப் புருஷர்....!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2014
05:08

சுவாமி விவேகானந்தர் தமது வேதாந்த உரையில் கூறுகிறார்.... நான் உன்னைக் காண் வேண்டுமானால்  இறைவனின் மூலமாகவே காண வேண்டும். ஒரு நாற்காலியைக் காண, அதைக் கடவுள் ரூபமாகக் காண வேண்டும்.. உன்னால் கடவுளைத் தவிர வேறு எதையும் காண முடியாத நிலை வர வேண்டும். ஆத்மைவ இதம் ஸர்வம்... ஈஸ்வரனைத் தவிர வேறு ஒன்று இருந்தால் தானே அதை காண முடியும்!.. இது என்ன மரம்? இது என்ன  காடு ? என்று கூற வேதம் தேவையில்லை.  அதை அறிய ஸ்வாபாவிகமான அவித்யையே போதும்... ப்ரம்ஹ வனம் ப்ரம்ஹ  ஸ வ்ருஷமாஸீத் என்கிறது வேதம். நீ மரம் என்றும் காடு என்றும் எதை கூறுகிறாயோ அதுவே பிரம்மம். மரம் தானே தெரிகிறது என்று கூறினால் அது அவித்யைதான்! மரத்திற்கு தான் ஒரு மரம் என்று தெரியுமா ?, மனிதன் தான் மரத்தைப் பல பெயர்களில் அழைக்கிறான். மரத்திற்கு அப்பெயர் தெரியாது.  அந்த மரம்  தேக்கு,  தென்னை என்று நாமே நாமத்தை ஆரோபணம் செய்கிறோம். அதை பொறுத்தவரை, இருப்பே அதற்கு தெரியும். பாஹ்யாகார அபஹ்த சித்தானாம் என்று பகவத்பாதர் கூறுகிறார். வெளி விஷயங்களால் அபகரிக்கப்பட்ட புத்தி உடையவர்களுக்கு இந்த தத்வ ஞானம் என்பது கஷ்டமாக இருக்கும்.

ஆனால் பாஹ்யாகார நிவ்ருத்த புத்தீனாம் து லப்த குரு ஆத்ம ப்ரஸாதானம், அதாவது குரு வெளிமுகமாக உள்ள மனதை உபதேசத்தால் உள்முகமாகத் திருப்புகிறார். உள்முகமான மனதை இதயத்திலிருந்து ஒருசக்தி இழுக்கிறது. உள்ளிருக்கும் ஒன்று வேலை செய்கிறது. சுவாமிஜி கூறுகிறார்: சத்தியம் உனது இருப்பைப் போல எளியது: உன் இருப்பை விட எளிதா என்ன இருக்க முடியும்? வெளியில் உள்ள பொருள் என்றால் பார்க்க கண் வேண்டும். ஆனால் நம் இருப்பை உணரக் கண் வேண்டாம். கண், காது இல்லாத நிலையிலும் மனமற்ற ஸுஷுப்தி நிலையிலும் அது உள்ளது. இந்திரியங்கள் எதுவும் அதை உணரத் தேவையில்லை.  விளக்கை அனைத்து இருளாக்கிவிட்டாலும் நான் இருக்கிறேன் எனும் உணர்வு நமக்குள்ளேயே உள்ளது. அது தான் ஸ்வயம் பிரகாசம். மனது அந்தர்முகமாகும் போது ஒரு நிலையில் பூர்ணத்துவத்தை, ஸ்வஸ்வரூபத்தை உடலோ, மனமோ, இந்திரியங்களோ, அகங்காரமோ அல்லாத சுத்தமான சிவத்தை நாடும் தகுதியை அடைகிறது.

ஸ்ரீராமகிருஷ்ணரிடம் இரு வித சமாதி நிலைகளை நான் பார்த்திருக்கிறேன் என்கிறார் சுவாமிஜி, ஒன்று ஸவிகல்ப சமாதி, அதாவது நீ ஏதாவது ஒன்றில் முழு கவனத்தையும்  வைத்தால் அது மட்டுமே தெரிகிறது. வேறு எதுவும் தெரியவில்லை. இது மனதின் ஓர் ஏகாக்ர நிலை. இரண்டாம் நிலையில் எதுவும் தெரிந்து கொள்வதற்கில்லை. தெரிந்து கொள்பவன், தெரிந்து கொள்ளும் பொருள் தெரிந்து கொள்வது என்ற த்ரிபுடி மூன்று நிலைகள் இல்லாமல் உதிக்கும் இடத்திலேயே மனம் ஒடுங்கிடும் நிர்விகல்பமான நிலை. அந்த  நிலையைக் காட்டித் தரத்தான் குரு தேவை. சவாமி விவேகானந்தர் யாழ்ப்பாணத்தில் ஒரு சொற்பொழிவைத் துவங்கும் போது, பேச வந்த விஷயமோபெரிது: நேரமோ குறைவு என்றார். சுவாமிஜி முன் அமர்ந்திருந்த ஓர் இளைஞர் இதைக் கேட்டதும் எழுந்து போய்விட்டார். அவர் பெயர் யோகநாதன். பின் யோக்ரஸ்வாமி என்று பிரசித்தமான மகாத்மா ஆனார். அவருக்கு சவாமிஜியின் ஒரே வாக்கியத்தால் எழுச்சி வந்தது.

தத்வமஸி- நீ அதுவே என்று சுவாமிஜி ஞானயோகச் சொற்பொழிவுகளில் கூறும் போது சிலருக்கு அந்த நேரத்தில்  அந்த அனுபவம் இருக்கும்.  நீ நித்யமான, சுத்தமான , பூர்ணமான வஸ்து, முக்தி உன் ஸ்வரூபம், நீ உடம்பில்லை. உனக்குத் துன்பம் இல்லை. பிறப்பு இறப்பில்லாத அகண்டமான பூர்ண வஸ்து, உனக்கு பாவம் இருப்பதாகக் கூறுவதே பாவம் என்றும் கூறும் போது கேட்பவர்களுக்கும் அந்த உணர்வு ஏற்படும். ஓர் அமெரிக்கப் பெண் ஒரு முறை சுவாமிஜி, நீங்கள்  எங்களை ஹிப்னாடிஸ நிலைக்கு ஆழ்த்துகிறீர்கள் என்றார்.

சவாமிஜி, மகளே உன்னை மயக்க வேண்டிய தேவையில்லை. நீ ஏற்கனவே மயக்கத்தில் தான் இருக்கிறாய், என் முயற்சி உன்னை மயக்கத்தில் இருந்து விடுவிப்பது தான் என்றார்.

அனாதி மாயயா ஹுப்த: யாதஜீவ ப்ரபுத்யதே!
அஜமநித்ர அஸ்வப்நமத்வைதம் புத்யதே ததா!

சவாமிஜி  சொல்வார்: ஓர் ஆச்சார்யரின் பணி ஒரு ஜீவன் முக்தரின் பணியைவிடக் கடினமானது. ஜீவன் முக்தருக்கு உலகம் கிடையாது. அவர் உலகைப் பற்றி நினைப்பதில்லை.

ஆனால் ஓர் ஆச்சார்யர் - உலகம் என்ற ஒன்று இல்லை என்று நன்கு அறிந்தவர். ஆயினும் உலகத்தோடு ஒன்றி, பணியாற்ற வேண்டியுள்ளது.

வேதாந்தம் கூறும்: நீ எந்த வியாதியைக் கூறினாலும் அது ஒரே காரணத்தில் அடக்கம்- அதாவது அஞ்ஞானம். அதற்கு ஒரு மருத்துவ ஞானமே.
சுவாமிஜியிடம் ஒருவர் கேட்டார்:- நான்  பிரம்மம் என்று நீங்கள் சொல்கிறீர்கள். எனக்குத் தலை வலிக்கிறதே! அப்பேது பிரம்மம் என்று தெரிந்து கொண்டால் தலைவலி போய்விடுமா?

சுவாமிஜியின் பதில்:  நீ பிரம்மம் என்று தெரிந்து கொண்டால் உனக்கு தலையே இருக்காதப்பா. அப்போது தலைவலி எது?

அசரீரம் வா வஸந்தம் ந ப்ரியாப்ரியேஷு ஸ்ப்ருசத: என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்.

சரீரத்திலுள்ள வேதனைகளைப் போக்க முடியவில்லை எனில் அதற்கு காரணம் உன் தாதாத்ம்ய பாவம்- அபிமானம் தான். உன் சரீரம் போன்றே பிற சரீரங்கள் சூரிய, சந்திரர்கள், மரம், செடி கொடிகள் இவை இருக்கின்றன. அவற்றின் வேதனைக்களையெல்லாம் போக்க முடியுமா?

குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது போல் நீ உன்னைத் தெரிந்து கொண்டாயாகில் உனக்கொரு கேடுமில்லை என்று கைவல்ய நவநீதம் என்ற நூல் கூறுகிறது. உனக்கு கேடு உள்ளது என நீ நினைப்பது ஒரு தோற்றமே.

நான் இருக்கிறேன் என்ற உணர்வே ஆத்மாவின் விஸ்வரும் அதை உணர்ந்தால் அது சுத்தம், நிர்மலம். அதில் பந்தமில்லை. எல்லோரும் இதைத் தெரிந்து கொள்ளட்டும். மீண்டும் மீண்டும் தியானம் செய்யட்டும், உண்மையை  தெரிந்து கொண்டால் உள்ளிருக்கும் நல்லதெல்லாம் வெளியில் வரும்...

ஆத்மாவை இது போல, அது போல எனக்கூற முடியாது. அதற்கு ஏன்  வெளியிலிருந்து உபமானம்? யாருக்குத்தான் அவர்கள் இருப்பு தெரியாது?

உலகத்தை சீர்திருத்த கிளம்பாதே. அப்படி கிளம்ப வேண்டுமானால் உனக்குள்ள பிரச்னையே உனக்கு தெரியாது. அவ்வாறு இருக்கும் போது நீ உலகை  எப்படி சீர்திருத்துவாய்? உனது உண்மையைத் தெரிந்து கொண்டால், நீ யார்? உன் பூர்ணத்வம் என்ன என்பதை நீ தெரிந்து கொண்டால், உன் இருப்பே உலகிற்குப் பெரிய அனுக்ரஹமாக இருக்கும். ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர் சுவாமி சாரதானந்தர்.  ஒரு பக்தர் ஞூவரை பார்க்க வந்தார். மகாத்மாவான சாரதானந்தர் வந்தவரை நமஸ்கரித்தார். சுவாமி  நான் ஒரு கிருஹஸ்தன். என்னை ஏன் வணங்குகிறீர்கள்? என்றார் அவர். நீங்கள் ஸ்ரீராமகிருஷ்ணரை பார்த்திருக்கிறீர்களே என்றார் சுவாமிகள். அதற்கு அவர் ஸ்ரீராமகிருஷ்ணரைப் பார்த்ததே பெருமை ஏன்றால் இங்குள்ள பல படகுக்காரர்கள் கூடப் பார்த்துள்ளனரே என்றார். அவர் அப்படிச் சொன்னதும் சுவாமிக்கு சற்று கோபம் வந்தது. ஸ்ரீராமகிருஷ்ணனரைப் பார்த்ததால் உங்களுக்குப் பெருமை என்று நான் கூறவில்லை. அவர் திருஷ்டி உங்கள் மேல்  விழுந்திருக்கிறதே என்பதால் சொல்கிறேன். படகில் செல்பவர்கள் மற்றும் அவரது திருஷ்டிபட்டவர்கள் கூட ஆன்மிகத்தில் எவ்வாறு முன்னேறினார்கள் என்பது பற்றி உங்களுக்கு என்ன தெரியும். என்று கேட்டார் சவாமி.

சத்தியத்தை பார்த்தபின் அதைத் தவிர்க்க முடியாது. சூரியனை பார்த்தால் வெளிச்சம் தெரியாமல் இருக்குமா? உண்மையை உணர்ந்த மஹாபுருஷர் குகையில் இருந்தாலும் சரி, எங்கே இருந்தாலும் சரி, அவால் உலகில் எது நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும். ஸ்ரீராமகிருஷணரின் சாந்நித்யம் அந்த மாதிரி, சுவாமிஜி பாரதம் முழுவதும் சஞ்சாரம் செய்ததும் அப்படித்தான். சுவாமிஜி கூறுகிறார்: நான் எதுவும் செய்யவில்லை. ஸ்ரீராமகிருஷ்ர் காளி, காளி என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தாரே அந்த சக்தி தான் என்னைப்பிடித்து இந்த வேலைகளை எல்லாம் செய்ய வைத்தது.

சுவாமிஜி காலத்துக்கு வேண்டிய உபதேசம் செய்தார். வீராவேசத்தைக் கிளப்பக்கூடிய வார்த்தைகள் கூட அதில் உள்ளன. ஆனால் நித்தியமாக ஏக்காலத்திலும் பயன்படக்கூடியது அவரது உபதேசமாக உள்ள வேதாந்த விஞ்ஞானம் தான். வேதாந்தத்தின் சாரத்தை எடுத்து நமக்கு உத்போதனம் பண்ணி இந்த உண்மையை நாம தெரிந்து கொள்ள வேண்டும் என்பதும் நம்முள் இருப்பது பெரிய நிதி என்று போதனை செய்வதும் தான் அவரது நோக்கமாக இருந்தது. சுவாமிஜி தமது  39-வது வயதில் சரீரத்தை விடுவதற்கு முன்பிருந்த பாரதத்துக்கும் அதன் பின் வந்த பாரதத்துக்கும்  வித்தியாசம் உள்ளது.

 ஆம் பாதரம் விழித்துக்கொண்டுவிட்டது. ஸ்ருதி கூறும்: உத்திஷ்டத! ஜாக்ரத! ப்ராப்ய வரான் நிபோதத! எழுந்திரு, விழித்திரு! உத்தம குருவை அடைந்து ஸத்தியத்தை அடை. இதை சுவாமிஜி எழுந்திரு, விழித்திரு , லட்சியத்தை அடையும் வரை ஓயாது உழைத்திரு என்றார். சுவாமிஜி சிகாகோ செல்வதற்கு முன்பு யாரும் உதவ முன்வரவில்லை. ஈச்வரனே நேரடியாக இருவருக்கு உதவ  வேண்டியிருந்ததால் வேறு இடங்களிலிருந்து  உதவி வரவில்லை போலும்  பாரதம் அடிமைப்பட்டிருந்த காலமானதால் சவாமிஜி ஷாத்ர பாவத்தை எடுத்துக்கொண்டார். சுவாமிஜியிடம் சுத்த ஸத்வம் தான் உள்ளது என்று பகவான்   ஸ்ரீராமகிருஷ்ணனர் சொல்வார். சுவாமிஜி எதிலேயும் பற்றுக் கொள்ளவில்லை. தான் செய்ய வேண்டிய வேலையை முடித்துவிட்டு ஒரு யோகி எப்படி சரீரத்தை விடுவாரோ, அது போல் இந்த நாளைக்கு சரீரம் போக வேண்டும் என்ற நிரூபணம் செய்து சரீரத்தை விட்டார்.

சரீரம் போன பிறகும் கூட ஒரு யோகநிலையில் ஸ்ரீஅரவிந்தர் போன்ற பலருக்கு ஆன்மிக அனுபவத்தை வழங்கினார். பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், அன்னையார், சவாமிஜி, பகாவனின் சீடர்கள் யாவரும் பெரும் பாவ மண்டலங்கள். ஸ்ரீராமகிருஷ்ணரை இந்த பாவ மண்டலத்தின் மூலம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் அதில் தூய்மை, பாவம், பக்தி எல்லாமே இருக்கும். ராமகிருஷ்ண பாவப் பிரச்சாரம் உலகில் பரவ வேண்டும். சுவாமிஜியை பலர் ஒரு சீர்திருத்தவாதி, சமூக சேவகர ஆக மட்டும் நினைத்துக்கொள்கிறார்கள். அவர் ரிஷி பரம்பரையில் வந்தவர் என்பதை உலகம் அறிய வேண்டும். அவரது நூல்களில் ஏதாவது ஒரு வாரத்தையை தொட்டாலும் அது ஓர் அக்னி.

அந்த அனுபவம் எல்லோருக்கும் பரவ வேண்டும். பாரத பூமியின் பெருமை நமக்குத் தெரிய வேண்டும். அது ரிஷி பூமி, தபோ பூமி, ஆர்ஷ பூமி, ஆன்மிகத்தை விட்டு வேறு எதை எடுத்துக்கொண்டாலும் அழிந்து போகும் பாரதம்.  நமது முதுகெலும்பு அது. இவ்வளவு வேற்றுமைகள் உள்ள தேசம் வேறு கிடையாது. இத்தனை வேற்றுமைகள் இருந்தும் வேற்றுமை இல்லாத, இமயம் முதல் குமரி வரை பரவியுள்ள வேத பரம்பரை என்ற சம்ஸ்காரம் தான் நம் தேசத்தைக் கட்டி போட்டுள்ளது. மறுமலர்ச்சி என்பது ஆன்மிக வாழக்கையிலிருந்து தான் வர வேண்டும். ஒவ்வொரு  வீடும் ஆசிரமம் ஆக வேண்டும். அப்போது தான் ஆத்மஞானம் என்னும் விதையை போட முடியும். எல்லோருக்கும் பக்தியும் ஞானமும் உண்டாகப் பிரார்த்திப்போம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar