புதுச்சேரி: புதுச்சேரியில் நாளை, பல்வேறு கோவில்களில் கீதாராம சாஸ்திரி தலைமையில், ஆவணி அவிட்டம் நடக்கிறது. லலிதாம்பிகை வேத சிவாகம டிரஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரியில் பல்வேறு கோவில்களில், நாளை (10ம் தேதி) யசூர் வேத உபாகர்ம ஆவணி அவிட்டத்திற்கு (ரிக் வேத உபாகர்ம ஆவணி அவிட்டம்) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 8.00 மணிக்கு, வெங்கட்டா நகர் ஸ்ரீ விஜய கணபதி கோவிலிலும், காலை 9.30க்கு அய்யனார் நகர் கல்யாண சுந்தரர் கோவில், ௧0.30க்கு, காந்தி வீதி வேதபுரீஸ்வரர் கோவிலில், கீதாராம சாஸ்திரி தலைமையில் ஆவணி அவிட்டம் நடக்கிறது. நாளை மறுநாள் (11ம் தேதி) காலை 9.00 மணிக்கு மேல் மொரட்டாண்டி நவக்கிரக கோவிலில் காயத்திரி ஹோமம் நடக்கிறது. இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு காயத்திரி மாதா அருள் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு, 93454-51655 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.