ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் ஆடிப்பூர திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2014 12:08
சேலம்: சேலம், இரும்பாலை அடுத்த அழகுசமுத்திரத்தில், ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், கஞ்சிக் கலயம் எடுத்து வரும் விழா நடந்தது. இவ்விழாவில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவ்வாடை பக்தர்கள், ரதத்தில் அலங்கரிக்கப்பட்ட ஆதிபராசக்தி திருஉருவ படத்துடன் ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர். கஞ்சிக்கலயம், முளைப்பாரி, அக்னி கரகம், பூங்கரகம் ஆகியவற்றை எடுத்து வந்தனர். அழகுசமுத்திரம் பச்சியம்மன் கோவில், ஆலமரம் புதுமாரியம்மன் கோவில், காளியம்மன் கோவில், இரும்பாலை மெயின்கேட் வழியாக வந்து வழிபாட்டு மன்றத்தை அடைந்தனர். ö பாதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். மேலும், மன்றத்தின் சார்பில், கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியும், அன்னதானம் வழங்குதலும் நடந்தது. ஏற்பாடுகளை, அழகுசமுத்திரம் வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர்.