வடமதுரை : வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடி விழாவில், முத்துப்பல்லக்கில் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த ஆக.2 ல் கொடியேற்றத்துடன் துவங்கிய விழா இன்று நிறைவடைகிறது. நாள்தோறும் இரவு மண்டகபடிதாரர் சிறப்பு வழிபாடும், சுவாமி புறப்பாடும், கலை நிகழ்ச்சியும் நடந்தது. அதிக அளவில் பக்தர்கள் பங்கேற்கும் வசந்தம் முத்துப்பல்லக்கு நேற்று முன்தினம் இரவு நடந்தது.இரவு முழுவதும் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோயில் செயல் அலுவலர் வேலுச்சாமி, தக்கார் வேல்முருகன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.