பதிவு செய்த நாள்
14
ஆக
2014
01:08
பரமக்குடி : பரமக்குடி அலங்கார மாதா அன்னை சர்ச் திருவிழா, ஆக., 15 ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தினமும் மாலை 6 மணிக்கு சர்ச் வளாகத்தில் அன்னையின் திருஉருவப் பவனியுடன் ஜெபமாலையும், சிறப்பு திருப்பலியும் நடக்கும். ஆக., 23 மாலை 6 மணிக்கு திருப்பலிக்கு பின், தூய அலங்கார அன்னையின் திருவுருவ தேர்ப்பவனி வலம் வரும். மறுநாள் காலை 7.30 மணிக்கு திருப்பலி, கொடி இறக்கத்துடன் விழா நிறைவடையும். பாதிரியார்கள் செபஸ்தியான், ஜோஸ்வா, எஸ்.எம்.எஸ்.எஸ்., செயலாளர் சவரிமுத்து, இணைச் செயலாளர் ஜஸ்டின் திரவியம், திருஇருதய, அமலவை அருட்சகோதரிகள், பங்கு பேரவை, இறை மக்கள் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.