பதிவு செய்த நாள்
18
ஆக
2014
01:08
ஆர்.கே.பேட்டை : கோரகுப்பம் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், வரும் 27ம் தேதி நடக்கிறது. ஆர்.கே.பேட்டை - பள்ளிப்பட்டு நெடுஞ்சாலையில் உள்ளது, கோரகுப்பம் கிராமம். வரசித்தி விநாயகர் கோவில், புதிதாக கட்டப்பட்டு வருகிறது. வரும் 27ம் தேதி காலை, 11:40 மணிக்கு, கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.முன்னதாக, வரும் 25ம் தேதி மாலை, கணபதி பூஜை நடைபெறும். மறுநாள் காலை, கோ பூஜை, தன பூஜை, பூர்ணஹூதி, புதிய சிலை கரிக்கோலம் வலம் வருகிறது. மாலையில், யாக சாலையில் கலசம் ஸ்தாபனம் செய்யப்படுகிறது.புதன்கிழமை காலை, 11:40 மணிக்கு, கோவில் கோபுரம், மூலவர் சிலைக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இரவு, சுவாமி வீதியுலா வருகிறார்.