பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஆக 2014 10:08
திருப்புத்தூர் : பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில்,விநாயகர் சதுர்த்தி பெருவிழா நாளை துவங்குகிறது. பத்து நாட்கள் நடக்கும் சதுர்த்திப் பெருவிழாவில் நாளை காலை 9 மணிக்கு, மூஷிக படம் உள்ள கொடி, திருக்கோயில் வலம் வந்து, கொடிமரத்திற்கு எழுந்தருளல் நடைபெறும். பின்னர் கொடி, கொடிமரத்திற்கான சிறப்பு பூஜைகள் துவங்கும். அங்கு சத்தேவருக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெறும். பின்னர் கொடியேற்றப்பட்டு விழா துவங்கும். தினமும் பல்வேறு வாகனங்களில்,கற்பக விநாயக உற்சவர் திருவீதி வலம் வருவார். இரண்டாம் நாள் முதல், எட்டாம் திருநாள் வரை, காலையில் வெள்ளிக்கேடகத்தில், சுவாமி புறப்பாடும் நடைபெறும். ஆறாம் திருநாளான ஆக.25ல் ‘கஜமுக சூரசம்ஹாரம்’ நடைபெறும். 28ல் தேரோட்டம் நடைபெறும்.