Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ... கொளஞ்சியப்பர் கோவிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடு! கொளஞ்சியப்பர் கோவிலில் கிருத்திகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலில் பல சன்னதிகள் மூடல்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 ஆக
2014
11:08

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், குருக்கள் பற்றாக்குறையால், பல சன்னதிகள் மூடி கிடப்பதாக, தமிழக விஸ்வ இந்து பரிஷத் நிறுவனர் எஸ்.வேதாந்தம் தெரிவித்தார். ராமேஸ்வரத்தில் அவர் கூறியதாவது: இந்துக்களுக்கு பாரபட்சமின்றி சலுகைகள் வழங்குதல்; நாடு முழுவதும் ஒரே மாதிரியான திருமண சட்டத்தை அமல்படுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்தி, ஓசூரில், டிச., 28 ல், இந்துக்கள் மாநாடு நடக்க உள்ளது. இதில் பங்கேற்க காஞ்சி சங்கராச்சாரியார், திருபனந்தாள், திருவாவடுதுறை, மதுரை ஆதீனங்கள் மற்றும் ஆன்மிக பெரியவர்களை அழைக்க உள்ளோம்.

ராமேஸ்வரம் கோயிலில் 52 குருக்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில், 25 பேர் மட்டுமே இருப்பதால், தட்சிணா மூர்த்தி, பெருமாள், சேதுமாதவர், பைரவர் உள்ளிட்ட பல சன்னதிகள் மூடி கிடக்கிறது.அங்கு பூஜைகள் நடக்கவில்லை. இக்கோயிலில் 1986ம் ஆண்டில், திருடுபோன லட்சுமணர் சுவாமி ஐம்பொன் சிலையை கண்டறிய, கோயில் நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.தமிழகத்தில் ஆன்மிக மரபு தெரிந்தவரை தான் கோயில் அதிகாரியாக நியமிக்க வேண்டும். இல்லையேல், அவர்களுக்கு 6 மாத பயிற்சி அளிக்க வேண்டும். ராமேஸ்வரம் கோயில் மூன்றாம் பிரகாரத்தில், ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட மன்னர் புலிதேவன் சிலை பராமரிப்பின்றி உள்ளது. அதை சுத்தம் செய்து, ஆண்டுக்கு ஒரு முறை விழா நடத்த வேண்டும். ராமேஸ்வரத்திற்கு கூடுதல் ரயில் இயக்கவும், சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தவும், தமிழக எம்.பி.,க்கள் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.தமிழக மீனவர் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண, பிரதமர் மோடி விரைவில் நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு அவர் கூறினார். தமிழக விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகி ராமசுப்பு, மாநில கோயில், திருமடங்கள் பாதுகாப்பு குழு நிர்வாகி சிவராசன் உடன் இருந்தனர்.

தொடர்புடைய கோயில்கள் :
பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தேனி: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நடந்த ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar