கிருஷ்ணர் பிறந்த மதுரா, அவர் கோபியரோடு ஆடிப்பாடி மகிழ்ந்த பிருந்தாவனம், குன்றினைக் குடையாகப் பிடித்த கோவர்த்தனம் இந்த மூன்றும் முக்கோண வடிவில் அடுத்தடுத்து அமைந்துள்ளன. இதில் கிருஷ்ணர் பிறந்த சிறைச்சாலையே தற்போது கோயிலாக உள்ளது. இங்கு சத்தியபாமாவுடன் பாலகிருஷ்ணர் அருள்பாலிக்கிறார். இவரை உள்ளத் துõய்மையுடன் போற்றிப் பாடி, மனதால் நினைத்தாலே செய்த பாவம் அனைத்தும் தீயில் பட்ட துõசு போல எரிந்து போகும் என திருப்பாவையில் ஆண்டாள் குறிப்பிடுகிறாள்.