நுங்கம்பாக்கம்: மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவிலில், வரும், ௨௭ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. மகாலிங்கபுரம், அய்யப்பன் கோவில் கோபுரத்தில் தங்க முலாம் பூசப்பட்ட தகடுகள் பதிக்கப்பட்டுள்ளன. அதற்கான சிறப்பு வழிபாடு, கடந்த, ௨௧ம் தேதி துவங்கியது. வரும் ௨௭ம் தேதி, மகா கும்பாபிஷேகம் மற்றும் அஷ்ட பந்த கலச சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை, பக்தர்கள், www.chennailivestream.in/ sabs.aspx என்ற இணைய தளத்தில், நேரடி ஒளிபரப்பாக காணலாம்.