பதிவு செய்த நாள்
28
ஆக
2014
12:08
ஆர்.கே.பேட்டை : ஆர்.கே.பேட்டை அடுத்த, கோரகுப்பம், வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கடந்த திங்கட்கிழமை மாலை, கணபதி பூஜையுடன், கும்பாபிஷேகம் துவங்கியது. 26ம் தேதி காலை, நவகிரக ஹோமம், கோ பூஜை நடத்தப்பட்டது. பகல் 11:00 மணியளவில், புதிய சிலை கரிக்கோலம் வந்தது. மாலை 4:00 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கியது.நேற்று காலை 7:00 மணிக்கு, தத்வார்ச்சனையுடன் கும்பாபிஷேகம் துவங்கியது. 11:00 மணிக்கு மகாபூர்ணஹூதியுடன், யாகசாலையில் இருந்து, புனிதநீர் கலசங்கள் கோவில் கோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. பின், 11:40 மணியளவில், கோபுர கலசத்திற்கு, புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து மூலவர் சிலைக்கு புனிதநீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு 7:00 மணிக்கு, உற்சவர் வீதியுலா எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், கோரகுப்பம், பாலகிருஷ்ணாபுரம், கிருஷ்ணராஜகுப்பம், கன்னிகாம்பாபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.