பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே ராம அனுமான் கோவிலில் நடந்த மண்டலாபிஷேக விழாவில் ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூரில் உள்ள 127 அடி உயர ராம அனுமான் திருப்பணி நடைபெறும் இடத்தில் மண்டலாபிஷேக விழா நடந்தது. அதையொட்டி பட்டாபிஷேக கோலத்தில் உள்ள ராம அனுமான், ராமானுஜர் ஆகிய மூல விக்ரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் மூல மந்திர வேள்விகள் நடந்தது. பூஜைகளை சிதம்பரம் ரங்காச்சாரியார் சுவாமிகள் நடத்தி வைத்தார். பக்தர்களுக்கு அன்னதானத்தை செந்தமிழ்ச்செல்வி ராமதாஸ் வழங்கினார். பு.முட்லூரை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விவசாய சங்க தலைவர் விஜயகுமார், உத்திராபதி, பழனிவேல், தேசிங்கு, சதாசிவம், ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ராம அனுமான் அறக்கட்டளை நிறுவன அறங்காவலர் சீனு என்கிற ராமதாஸ் செய்திருந்தார்.