திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த விட்டலாபுரத்தில் மாரியம்மன், திரவுபதி அம்மன், பரமேஸ்வரன் கோவில்கள் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. இதையொட்டி 26 ம் தேதி மாலை 6 மணிக்கு கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. நேற்று காலை 2ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. 9.20 மணிக்கு, யாகசாலை புனித கலசங்கள் கோவில் வலம் வந்து முதலில் முத்துமாரியமன், திரவுபதியம்மன், பரமேஸ்வரன் சன்னதி விமான கலசங்களுக்கு புனித நீரால் கும்பாபிஷேகம் நடந்தது. பூஜைகளை விட்டலாபுரம் புரோகிதர் தண்டபாணி, அர்ச்சகர்கள் நாகராஜ், சீனுவாசன் குழுவினர் செய்தனர். இரவு 9 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடந்தது.