பதிவு செய்த நாள்
28
ஆக
2014
01:08
புதுச்சேரி: மூலகுளம் கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். மூலகுளம் மோதிலால் நகர் 4வது குறுக்குத் தெருவில் கற்பக விநாயகர் கோவிலில் திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேக விழாவுக்கு ஏற்பாடு செய்யப் பட்டது. விழாவையொட்டி, நேற்று முன் தினம் காலை 7:30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மாலை முதற்கால யாக சாலை பூஜை நடந் தது. நேற்று காலை 6:30 மணிக்கு இரண்டாம் யாக சாலை பூஜை நடந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு பிரகார தெய்வங்களுக்கும், ராஜகே ாபுரத்திற்கும், 10:10 மணிக்கு, மூலவர் வலம்புரி கற்பக விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் எம்.பி., ராதாகிருஷ்ணன், அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.