குமரி மாவட்டத்தில் 4500 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஆக 2014 01:08
நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் இந்துமுன்னணி, சி÷சேனா, இந்து மகாசபா, பா.ஜ., மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்படுகிறது. மொத்தம் 4500 சிலைகள் வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளில் அந்தந்த இயக்கத்தினர் ஈடுபட்டுள்ளனர். பூஜையில் வைக்கப்படும் சிலைகளை கண்காணிக்க 20 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் 5,6,7 தேதிகளில் கடலில் விசர்சஜனம் செய்யப்படுகிறது. 10 இடங்களில் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன் உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.