பதிவு செய்த நாள்
30
ஆக
2014
10:08
வேதாரண்யம் : நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா நேற்று துவங்கியது. இதையொட்டி, மாலை, 5:30 மணியளவில், மாதா உருவம் பொறித்த திருக்கொடி ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக சென்றது. விழாவை முன்னிட்டு, ஆலயம் முழுவதும், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. மாலை, 6:45 மணியளவில், கொடியேற்றம் நடந்தது. விழாவில் கலந்துகொண்ட லட்சக்கணக்கான பக்தர்கள், ’மரியே வாழ்க’ என, கோஷம் எழுப்பினர். செப்., 7 ல் இரவு, 7:30 மணிக்கு மாதா பெரிய திருத்தேர் பவனி நடக்கிறது.