பதிவு செய்த நாள்
30
ஆக
2014
10:08
திருப்புத்தூர் : பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில், சதுர்த்தியை முன்னிட்டு தீர்த்தவாரி உற்சவம், கொழுக்கட்டை படையல், விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. சதுர்த்தியை முன்னிட்டு, தங்க கவசத்தில் ராஜ அலங்காரத்தில் கற்பக விநாயகர், நேற்று காலை காட்சி அளித்தார். பிச்சை சிவாச்சாரியார், சோமசுந்தரம், ஸ்ரீதர் ஆகியோர் பூஜைகள் செய்தனர். அதன்பிறகு கற்பக விநாயகர், தங்க மூஷிக வாகனத்தில் திருக்குளம் கரையில் எழுந்தருளினார். அங்குச தேவருக்கு, 16 திரவிய அபிஷேகம், அதைத் தொடர்ந்து தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. 18 படி மோதகம்: அதைத் தொடர்ந்து, 18 படி பச்சரிசி, 28 கிலோ வெல்லம், கடலை பருப்பு, எள், தேங்காய் போன்றவை கலந்து பிடிக்கப்பட்ட, ’மெகா சைஸ்’ கொழுக்கட்டையை, தங்க கவசத்தில் எழுந்தருளிய விநாயகருக்கு படையல் செய்து, வழிபட்டனர். இரவு, பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்புடைய கோயில்கள் :