பதிவு செய்த நாள்
30
ஆக
2014
01:08
திருப்பதி: திருமலையில் உள்ள திருக்குளம், நேற்று முதல், பக்தர்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது. திருமலை ஏழுமலையானுக்கு, செப்., 24ம் தேதி முதல், வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்க உள்ளது. அதற்காக, திருக்குளத்தை சுத்தம் செய்து, புதிய நீர் நிரப்பும் பணி, ஆகஸ்ட் மாதம் முதல் தேதி அன்று தொடங்கியது. அதனால், ஒரு மாதம் முழுவதும் திருக்குளத்தில் குளிக்க, பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. நேற்று முன்தினம், திருக்குளத்தை சுத்தம் செய்யும் பணிகள் நிறைவடைந்ததால், நேற்று முதல், பக்தர்களின் பயன்பாட்டிற்கு திருக்குளம் திறந்து விடப்பட்டது. மேலும், திருக்குளத்திற்கு நேற்று மாலை முதல், ஆரத்தியும் அளிக்கப்பட்டு வருகிறது.