பதிவு செய்த நாள்
30
ஆக
2014
01:08
தஞ்சாவூர்: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தில், ஹிந்து முன்னணி மற்றும் ஹிந்து அமைப்புகள் சார்பில், 340 விநாயகர் சிலைகள் பிரதீஷ்டை செய்யப்பட்டுள்ளது. பட்டுகோட்டையில், 66 விநாயகர் சிலைகளும், தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்தில் தலா, 49 சிலைகளும் பிரதீஷ்டை செய்து, பொதுமக்கள் வழிபட்டனர். சிலைகளுக்கு மத்திய அதிவிரைவுப்படையினர், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர், உள்ளூர் மற்றும் ஆயுதப்படை போலீஸார், ஊர்க்காவல் படையினர் என மொத்தம் சுமார் 3,000 போலீஸார் பாதுகாப்பு வழங்கினர். போலிஸாரின் உத்தரவின் பேரில், கும்பகோணம், பாபநாசத்தில் இன்றும், தஞ்சாவூர், அதிராம்பட்டினத்தில் நாளையும், மதுக்கூரில் திங்கட்கிழமையும், திருவையாறு, ஒரத்தநாட்டில் செவ்வாய்கிழமையும் ஊர்வலமாக எடுத்துச்சென்று நீர்நிலைகளில் கரைக்க உள்ளனர்.