பதிவு செய்த நாள்
30
ஆக
2014
01:08
திருக்கழுக்குன்றம்: மேட்டு வீரகுப்பம், வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. திருக்கழுக்குன்றம் அடுத்த மேட்டு வீரகுப்பத்தில், பழமையான வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. சிதிலமடைந்ததால், இந்த கோவிலை புதுப்பிக்க, கிராமவாசிகள், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முடிவு செய்தனர். அதன்படி, திருப்பணிகள் நடந்தன. யாகசாலை இதன் தொடர்ச்சியாக கும்பாபிஷேக பூஜைகள், கடந்த புதன்கிழமை கணபதி பூஜையுடன் துவங்கின. நேற்று முன்தினம், யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை 10:15 மணிக்கு, கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் சிலைக்கும் புனித நீர் ஊற்றி, அபிஷேகம் நடைபெற்றது. வரசித்தி விநாயகர் கோவில் அருகில், புதியதாக வீரலிங்கேஸ்வரர் கோவிலும் அமைக்கப்பட்டுள்ளது. இரவு, உற்சவர் வீதி உலா எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், சுற்று வட்டாரங்களில் உள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.