விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள அமிர்த கணபதி கோவலில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. விழுப்புரம் நகராட்சி 1 வது வார்டு பகுதியில் உள்ள அமிர்த கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, நேற்று காலை 7:00 மணிக்கு சுவாமிக்கு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 9:00 மணிக்கு தீப ஆராதனை, 10:00 மணிக்கு உற்சவர் வீதியுலா நிகழ்ச்சிகள் நடந்தது. விழுப்புரம் நகர கூட்டுறவு வங்கி தலைவர் சுப்ரமணியன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் ஜெயபாலன், வழக்கறிஞர் திருக்காமி, முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் பழனி கலந்து கொண்டனர்.