Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவையில் ஒரே நாளில் 325 சிலைகள் ... காரைக்கால் வனநந்தீஸ்வர் கோவிலில் கும்பாபிஷேகம்! காரைக்கால் வனநந்தீஸ்வர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமநாதபுரம் பகுதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

01 செப்
2014
12:09

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில், இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நொச்சிவயல் ஊரணிகளில் கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ராமநாதபுரம் நகர் உள்ளிட்ட பிற பகுதிகளில் 33 விநாயகர் சிலைகள் சிறியதும், பெரியதுமாக வைக்கப்பட்டிருந்தன. இச்சிலைகளுக்கு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று, இந்து முன்னணி சார்பில் அனைத்து சிலைகளும் மேள, தாளம் முழங்க வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. வழி நெடுகிலும் பெண்கள் தேங்காய் உடைத்து விநாயகரை வழிபட்டனர். வழிவிடு முருகன் கோயிலில் முன்பு பா.ஜ., அமைப்பு பொதுச்செயலாளர் மோகன் ராஜூலு ஊர்வலத்தை துவக்கி வைத்தார். இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, ராமர் சேது பாதுகாப்பு இயக்க பொதுச்செயலாளர் குப்புராமு, ஆர்.எஸ்.எஸ்., மாநில செயலாளர் ஆடலரசன், இந்து முன்னணி மாநில பேச்சாளர்கள் ரத்தினசபாபதி, கங்காதரன், பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் துரைக்கண்ணன், மாவட்ட தலைவர் சண்முகராஜா, நகர் தலைவர் சூரியபிரகாஷ், நகர் பொறுப்பாளர் கோட்டைச்சாமி, மண்டபம் ஒன்றியத் தலைவர் நம்புராஜன், மீனவரணி மாநில செயலாளர் காந்தி உட்பட பலர் பங்கேற்றனர். நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்ற ஊர்வலம் நொச்சிவயல் ஊரணியில் சிலைகள் கரைக்கப்பட்டன. கூடுதல் எஸ்.பி., வெள்ளைத்துரை, டி.எஸ்.பி., அண்ணாமலை ஆழ்வார் தலைமையில் 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தேய்பிறை பஞ்சமி வாராகி அம்மனை வழிபட உகந்த நாளாகும். பஞ்சமி திதியில் தான் வாராகி அம்மன் அவதரித்தார். ... மேலும்
 
temple news
கோவை ; மேட்டுப்பாளையம், வனபத்ரகாளியம்மன் திருக்கோவில் ஆடி குண்டம் திருவிழா முன்னிட்டு, குண்டம் கண் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதி கோயிலில் சாஸ்திரப்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் செய்யப்பட்டது.நாளை ஜூலை 16 ... மேலும்
 
temple news
கோவை; கோவை ராம் நகர் பட்டேல் ரோடு பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், ஆனி மாதம் கடைசி செவ்வாய்கிழமையை ... மேலும்
 
temple news
பிராட்வே; கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி கோவில் கும்பாபிஷேகம், நாளை கோலாகலமாக நடக்க உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar