தென்னமநாடு செல்வ விநாயகர் கோவிலில் செப்.,7ல் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01செப் 2014 12:09
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அடுத்த தென்னமநாடு செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா வரும் செப்டம்பர் 7ம் தேதி துவங்கி, இரண்டு நாட்கள் நடக்கிறது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள தென்னமநாடு கிராமத்தில் அருள்மிகு செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இங்கு பக்தர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் நிதி உதவியுடன் திருப்பணிகள் துவங்கி, கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்தது. மூலஸ்தான கோபுரத்துடன் கூடிய திருப்பணிகள் அனைத்தும் முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில், வரும் 8ம் தேதி, மஹா கும்பாபிஷேக விழா நடக்கிறது. விழாவையொட்டி செப்டம்பர் 7ம் தேதி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் ஆரம்பமாகிறது. விக்னேஸ்வர பூஜை, வாஸ்த்து சாந்தி, ரக்ஷாபந்தனம், அங்குரார்ப்பணம், நாடி சந்தானம், பூர்ணாஹூதி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கிறது. 8ம் தேதி காலை 10 மணிக்கு கடம் புறப்பாடு நடக்கிறது. 10.30 மணிக்கு மூலஸ்தான கோபுர கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தென்னமநாடு கிராம மக்கள், பக்தர்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.