பதிவு செய்த நாள்
01
செப்
2014
12:09
தஞ்சாவூர்: தஞ்சை, பட்டுக்கோட்டையில், பிரதிஷ்டை செய்த விநாயகர் சிலைகள், நேற்று, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விசர்ஜனம் செய்யப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தஞ்சாவூர் பகுதியில் பல்வேறு இடங்களில், இந்து அமைப்புகள் சார்பில், 30 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த பிரதிஷ்டை செய்த விநாயகர் சிலைகள், நேற்று மாலை ஊர்வலமாக தஞ்சை ரயில்வே ஸ்டேஷன் முன் எடுத்து வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில், பாஜ மாநகர தலைவர் விநாயகம் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்து துவங்கி வைத்தனர். ஊர்வலம் காந்திஜிரோடு, தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி, கொடிமரத்துமூலை வழியாக கரந்தை வடவாற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. ஆர்.டி.ஓ., தேவதாஸ்போஸ், தாசில்தார் துரைராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். டவுன் டி.எஸ்.பி., கண்ணன் தலைமையில், போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதே போல பட்டுக்கோட்டையில், பிரதிஷ்டை செய்த விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்து. இந்து முன்னனி மாநில அமைப்பாளர் முருகானந்தம் தலைமை வகித்தார். முக்கிய வீதிகள் வழியாக கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலைகள், வங்காள விரிகுடா கடலில் விசர்ஜனம் செய்யப்பட்டது. எஸ்.பி., தர்மராஜன் தலைமையில், 15 டி.எஸ்.பிக்கள் மற்றும் 25க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
* அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஏழரை அடி உயர விஸ்வரூப விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் மாலை நடந்த விநாயகர் விசர்ஜன ஊர்வலத்துக்கு, பா.ஜ., கட்சியின் மாவட்ட செயலாளர் ஐயப்பன் தலைமை வகித்தார். செந்தாமரை செல்வன் முன்னிலை வகித்தார். கொப்பம்பட்டி முருகன் அடிமை ஸ்வாமிகள், விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தை துவக்கி வைத்தார். கீழப்பழுவூர் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட, ஆறு விநாயகர் சிலைகளும் முக்கிய ஊர்கள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது.
* அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகளின் விசர்ஜன ஊர்வலம், நேற்று மாலை நடந்தது.