பதிவு செய்த நாள்
01
செப்
2014
12:09
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் திருமேற்றளீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், நேற்று, வெகு சிறப்பாக நடந்தது. காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையத்தில், திருமேற்றளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், திருப்பணி, ஓராண்டாக நடந்து வந்தது. திருப்பணி முடிந்து, கடந்த வெள்ளிக்கிழமை யாகம் துவங்கியது.நேற்று காலை, மூலவர் விமானத்திற்கும், ராஜகோபுர கலசத்திற்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.காஞ்சிபுரம் திருமேற்றளீஸ்வரர் கோவில் அருகில் உள்ள உற்றுகேட்ட முத்தீஸ்வரர் கோவிலுக்கும், ஒரே நேரத்தில், நேற்று, கும்பாபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து, நேற்று, மாலை 6:00 மணிக்கு, திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. அதன் பிறகு, இரவு 7:30 மணிக்கு, சுவாமி வீதிவுலா நடந்தது. இந்த கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.