பதிவு செய்த நாள்
01
செப்
2014
12:09
ஆர்.கே.பேட்டை, : குளக்கரை தேசம்மன் கோவில் கும்ாபிஷேகம், நேற்று நடந்தது. இதற்காக, நகரி தேசம்மன் கோவிலில் இருந்து, புனிதநீர் கொண்டு வரப்பட்டது. ஆர்.கே.பேட்டை அடுத்த, அம்மையார்குப்பம் குளக் கரையில் உள்ள தேசம்மன் கோவில் கும்பாபிஷேகம், நேற்று நடந்தது. இதற்காக, நகரி தேசம்மன் கோவிலில் இருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டு, அபிஷேகம் செய்யப்பட்டது.முனீஸ்வரன் கோவில் அருகே அமைந்துள்ளது, தேசம்மன் கோவில். இக்கோவிலில் சீரமைப்பு பணிகள், ஆறு மாதங்களாக நடந்து வந்தன. கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜை, வெள்ளிக்கிழமை மாலை கணபதி பூஜையுடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலை, புதிய சிலை நிர்மாணம் செய்யப்பட்டது. நேற்று காலை 11:00 மணிக்கு, கோவில் முன் மண்டபத்தில் உள்ள அம்மன் சிலைக்கும், அதைத் தொடர்ந்து மூலவர் அம்மனுக்கும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. முன்னதாக, யாகசாலையில் இருந்து புனிதநீர் கலசங்கள், ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன. மாலை 6:00 மணியளவில், தேசம்மன் வீதியுலா எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.