பதிவு செய்த நாள்
01
செப்
2014
12:09
திருத்தணி : சுந்தர விநாயகர் கோவிலின், மகா கும்பாபிஷேகம், வரும், 7ம் தேதி நடைபெறுகிறது. திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான சுந்தர விநாயகர் கோவில், திருத்தணி ம.பொ.சி., சாலையில் உள்ளது. இக்கோவில் கட்டி, 100 ஆண்டுகள் முடிந்து, 101வது ஆண்டு பிறந்துள்ளது. இக்கோவிலின் மகா கும்பாபிஷேகம், செப்டம்பர் மாதம், 5ம் தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்குகிறது. இதையொட்டி, கோவில் வளாகத்தில், மூன்று யாகசாலைகள், 108 கலசங்கள் வைத்து காலை, 9:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் மற்றும் ஹோமம் நடத்தப்படுகிறது. வரும், 7ம் தேதி காலை, 7:00 மணிக்கு, கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு, காலை, 8:00 மணிக்கு கோபுரத்தின் மீது, கலச நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.கடந்த, 2002ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு பின், வரும், 7ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.