பதிவு செய்த நாள்
01
செப்
2014
12:09
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில், விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. விநாயகர் சதுர்த்தி விழா, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில், சிறப்பாக கொண்டாடப்பட்டன. இதில், திருவண்ணாமலையில், 175 விநாயகர் சிலைகள் உள்பட மாவட்டம் முழுவதும், 925 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. சிலைகளை, நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்யும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. திருவண்ணாமலை காந்தி சிலையிலிருந்து துவங்கி, தேரடி வீதி, திருவூடல் வீதி, திருமஞ்சன கோபுர வீதி வழியாக ஊர்வலமாக விநாயகர் சிலைகøள் எடுத்துச் செல்லப்பட்டு, தாமரை குளத்தில் விசர்ஜனம் செய்யப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன், ஊர்வலம் நடந்தது.
* வேலூர் மாவட்டத்தில், 1,500 இடங்களில், விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. நேற்று, வேலூர் மற்றும் சத்துவாச்சாரி பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள், காலை, 10.30 மணிக்கு, கலெக்டர் அலுவலகம் அருகில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஊர்வலம், சதுப்பேரியை அடைந்ததும், அங்குள்ள ஏரியில், விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது. பாதுகாப்பு பணியில், வேலூர் மாவட்ட எஸ்.பி., விஜயகுமார் தலைமையில் ஆயுதப்படை, ஊர்க்காவல் படை உள்பட ஏராளமான போலீஸார் ஈடுபட்டனர்.