ரிஷிவந்தியம் பெரிய ஏரியில் விநாயகர் சிலைகள் கரைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01செப் 2014 12:09
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியத்தில் விநாயகர் சிலைகள், பெரிய ஏரியில் கரைக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி ரிஷிவந்தியத்தில் 14 விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து, பொதுமக்கள் வழிபட்டனர். மூன்றாம் நாளான நேற்று விநாயகர் சிலைகள் அனைத்தும் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. மேலும், குடியிருப்புகளில் வழிபட்ட களிமண்ணாலான விநாயகர் சிலைகளை ஊர்வலமாக சென்ற வாகனங்களில் பொது மக்கள் வைத்தனர். மாலை 6 மணியளவில் ரிஷிவந்தியம் பெரிய ஏரியில் அனைத்து சிலைகளும் சென்றடைந்தது. அங்கு விநாயகருக்கு கற்பூர தீபம் ஏற்றி வழிபட்டு, தண்ணீரில் கரைத்தனர். ரிஷிவந்தியம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பஞ்ச கீர்த்தனை: சின்னசேலத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் பஞ்ச கீர்த்தனை அலங்காரம் செய்து, வழி பட்டனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சின்னசேலம் விஜயபுரம் வேதவள்ளி மாரியம்மன் கோவிலில் கடந்த 29ம் தேதி இரவு விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. இதில் விநாயகர் சிலைகள் 5 விதமாக சிறப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டது. கற்பூரம் காட்டுவது, மத்தளம் அடிப்பது, பிடில், தவில் அடிப்பது, வயலின் வாசிப்பது போல் பஞ்ச கீர்த்தனை செய்யும் வகையில், விநாயகர் சிலைகள் அலங்காரம் செய்து வைக்கப்பட்டது. விநாயகர் சிலைகள் அசைவுகளுடன் கூடிய வகையில் அலங்காரம் செய்யப்பட்டதை கண்டு, ஏராளமான பக்தர்கள் மகிழ்ந்தனர். பின்னர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வாண வேடிக்கையுடன் வீதியுலா நடந்தது.