திண்டிவனம்: திண்டிவனம் கல்லூரி சாலை காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. திண்டிவனம் கல்லூரி சாலையில், 24 மனை தெலுங்கு செட்டியார் சமூக மக்களால் காமாட்சியம்மன் கோவில் அமைக்கபட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கடந்த 13 ம் தேதி கரிக்கோல ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து 29ம் தேதி பகல் 12 மணிக்கு சக்தி கரக ஊர்வலம், 30ம் தேதி மாலை முதல் கால பூஜையும், நள்ளிரவு 12 மணிக்கு 2வது கால யாகசாலை பூஜையும் நடந்தது. நேற்று காலை 10:15 மணிக்கு, காமாட்சியம்மன் மூலவர் விமான கலசத்திற்கு புனித நீரால் மகா கும்பாபிஷேம் நடந்தது. அதே நேரத்தில் பரிவார மூர்த்திகள் விநாயகர், முருக பெருமானுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 7 மணிக்கு திருக்கல்யாண வைபவமும் நடந்தது.