பதிவு செய்த நாள்
01
செப்
2014
12:09
அலங்காநல்லுார் : அலங்காநல்லுார், குமாரம், வலசையில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் ஊர்வலம் நடந்தது. ஐயப்பன் கோயில் நிர்வாகி சீனிவாசன் தலைமையில் சுந்தர்ராகவன் துவக்கி வைத்தார். ஒன்றிய தலைவர் பூமிநாதன், கோபால், ராஜசேகர், ராமச்சந்திரன், செல்வம், கணபதி, கணேசன் குழுவினர் ஊர்வலமாக எடுத்துச்சென்று கரைத்தனர். குமாரம் மீனம்மாள் கோயிலில் மாரிக்குமார், சிவக்குமார், பாலகிருஷ்ணன், நாகராஜ், பாலன், சந்திரசேகர் அடங்கிய குழு ஏற்பாட்டை செய்திருந்தது. வலசையில் கிராமக்குழுத்தலைவர் கருப்பணன் தலைமையில் இளைஞர் குழுவினர் ஏற்பாட்டை செய்திருந்தனர். சோழவந்தானில் ஊர்வலத்தை எம்.வி.எம்.,கலைவாணி பள்ளி நிர்வாக இயக்குனர் மணிமுத்தையா, தாளாளர் மருதுபாண்டியன் துவக்கினர். ஏற்பாடுகளை விழா குழுத்தலைவர் முருகேசன், செயலாளர் கணேசன், உறுப்பினர்கள் செய்திருந்தனர்.