பதிவு செய்த நாள்
01
செப்
2014
12:09
அன்னுார் : செல்லப்பம்பாளையம், செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 4ம் தேதி நடக்கிறது. செல்லப்பம்பாளையத்தில் பழமையான செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில், சிவசக்தி, பாலமுருகன், சவுடேஸ்வரி அம்மன், நீருற்றி விநாயகர் ஆகியோருக்கு புதிய கோவில்களும், நவகிரக சன்னதியும், விமான கோபுரமும் அமைக்கப்பட்டுள்ளன.இக்கோவிலில், வரும் 3ம் தேதி மதியம் தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து வருதல், காவடி ஆட்டம் நடக்கிறது. மாலையில் காப்பு அணிவித்தல், முதற்கால யாகசாலை பூஜை நடக்கிறது. 4ம் தேதி அதிகாலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. காலை 9.00 மணிக்கு விமானம், செல்வ விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. இரவு 7.00 மணிக்கு பாண்டுரங்கன் குழுவின் பஜனை நடக்கிறது. ஏற்பாடுகளை, ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.