தியாகதுருகம்: தியாகதுருகத்தில் விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலம் நடந்தது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தியாகதுருகம் நகரில் 7 இடத்தில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர். நேற்று முன்தினம் சிலைகள் விஜர்சன ஊர்வலம் நடந்தது. பா.ஜ., நகர தலைவர் சங்கர் தலைமையில், ஒன்றிய செயலாளர் பச்சையாப்பிள்ளை, அ.தி.மு.க., பாசறை செயலாளர் கிருஷ்ணராஜ் முன்னிலையில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், சப்இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் வேலுமணி, பா.ஜ., நிர்வாகிகள் தரணி பிரசாத், தனசேகரன் கலந்து கொண்டனர். கச்சிராயபாளையம் கோமுகி அணையில் சிலைகள் கரைக்க எடுத்து செல்லப்பட்டன. தியாகதுருகம் பகுதியில் வைத்த 15 க்கும் மேற்பட்ட சிலைகள் அந்தந்தப் பகுதி நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன.