ராசிபுரம்: ராசிபுரம் அடுத்துள்ள, பட்டணம் தண்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நாளை நடக்கிறது. ராசிபுரம் அடுத்த, பட்டணம் தண்டு மாரியம்மன் கோவிலில், நாளை (செப்., 4) கும்பாபிஷேகம் நடக்கிறது. இன்று புதிய சிலைகளுக்கு திருமஞ்சனம் செய்து கண் திறப்பு நிகழ்ச்சி மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜை, மூன்றாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. நாளை நான்காம் கால யாக சாலை பூஜை நடத்தப்பட்டு, காலை எட்டரை மணிக்கு, மூலவர் மற்றும் பரிவார கோபுரங்களுக்கு, புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடக்கிறது.