புதுச்சேரி: பாண்டுரங்க ரக்குமாயி ஆன்மீக கைங்கர்ய சபா சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. பிள்ளைத்தோட்டம் பாண்டுரங்க ரக்குமாயி ஆன்மீக கைங்கர்ய சபா சார்பில் மூன்றாம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, கடந்த 1ம் தேதி காலை 9:00 மணியளவில் தீபாராதனை செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணியளவில் செல்வ விநாயகருக்கு விசேஷ அலங்காரத்துடன் தீபாராதனை, இரவு 7.00 மணிக்கு கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சி நடந்தது. விழாவில் எம்.எல்.ஏ.,க்கள் நேரு, லட்சுமிநாராயணன், ஓம்சக்தி சேகர், பாஸ்கர், முன்னாள் எம்.எல்.ஏ., சிவா மற்றும் முன்னாள் கவுன்சிலர் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பாண்டுரங்க ரக்குமாயி ஆன்மீக கைங்கர்ய சபா நிர்வாகிகள் செய்தனர்.