ராமநாதபுரம் : ராமநாதபுரம் வெளிபட்டணம் சவுபாக்கிய நாயகி ரத்தினேஸ்வரர் கோயிலில் சண்டி ஹோம விழா செப்., 2ல் கணபதி பூஜையுடன் துவங்கியது. பைரவர், மோகினி, சக்தி பூஜைகள் நடந்தன. நேற்று காலை சண்டி ஹோமம், அம்பாளுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன. ஏற்பாடுகளை ஆயிர வைசிய மகாஜன சபை, மாத சிவராத்திரி விழாக்குழு செய்தனர்.