சாயல்குடி : சாயல்குடி அருகே கட்டாலங்குளத்தில் மாரியம்மன் கோவில் விழா மற்றும் அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா நடந்தது. அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. கிராம பக்தர்கள் சாயல்குடியிலிருந்து கட்டாலங்குளத்திற்கு மண் குதிரைகளை வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச்சென்று அய்யனார் கோவிலில் செலுத்தினர். ஊராட்சி தலைவர் சுந்தரராஜ் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.