பதிவு செய்த நாள்
05
செப்
2014
12:09
பொதட்டூர்பேட்டை: ரமணானந்தரின் குரு பூஜை, நாளை, பொதட்டூர் பேட்டை, அகத்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் நடக்கிறது. கடந்த, 1962ல், பொதட்டூர்பேட்டையில் தங்கியிருந்து, ஆன்மிக பணிகளில் ஈடுபட்டு வந்த ரமணானந்தரின் குரு பூஜை, நாளை நடக்கிறது. இதற்கான பணிகளில், அவரது சீடர்கள் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம், திருப்பாலக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமணானந்தர். இவர், 12 வயதில் தீட்சை பெற்று, துறவறம் மேற்கொண்டார். கடந்த, 1962 முதல், பொதட்டூர்பேட்டையில் தங்கியிருந்து, தனது இறுதி காலம் வரை, ஆன்மிக பணிகளில் ஈடுபட்டு வந்தார். 1994 செப்., 15ல், சித்திஅடைந்தார். இவரது சீடர்கள், ஆண்டுதோரும், ஆவணி மாதம் 21ம் தேதி, குரு பூஜை நடத்தி வருகின்றனர். நாளை அகத்தீஸ்வரர் கோவிலில் நடைபெறும் குரு பூஜைக்கான ஏற்பாடுகள், நடந்து வருகின்றன. இதில், தேவாரம், திருப்புகழ் ஓதப்பட உள்ளது.