ரிஷிவந்தியம்: அரியலூர் கிராமத்தில் மாரியம்மன், கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. மதியம் 12 மணியளவில் கோபுரகலசங்கள் மற்றும் ”வாமி சிலைகள் கரிவலம் நடந்தது. இரவு கோபுர கலசத்தில் தானியங்கள் வைத்து சுவாமிக்கு கண்திறப்பு நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 8.00 மணயளவில் மாரியம்மன் மற்றும் கங்கையம்மன் ”வாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. திருப் பணிக் குழு கமிட்டி நிர்வாகிகள் தணிகாசலம், லிங்கநாதன், சண்முகம், முருகவேல், செந்தில், ரமேஷ் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.