பதிவு செய்த நாள்
08
செப்
2014
01:09
பெங்களூரு :சிவாஜி நகர், துாய ஆரோக்கிய அன்னை பிறப்பு பெருவிழாவில், இன்று மாலை தேர் பவனி நடக்கிறது.பெங்களூரு, சிவாஜி நகர், துாய ஆரோக்கிய அன்னை பிறப்பு பெருவிழா, கடந்த மாதம், 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில், தினமும் தமிழ், கன்னடம், ஆங்கிலத்தில் திருப்பலி, சிறப்பு திருப்பலி, மாலையில், காடி மேடையில் மறையுரை, அன்னையின் கொடியேற்றம், நற்கருணை ஆசிர் நடந்தது. பெருவிழா நாளான இன்று, அதிகாலை, 4:30 மணியிலிருந்து, மாலை ௫:௦௦ மணி வரை, 30 நிமிடங்களுக்கு ஒரு முறை, தொடர்ந்து திருப்பலி நடக்கிறது. இன்று காலையில், ரஸ்ஸல் மார்க்கெட் சர்க்கிளில், தமிழில் நடக்கும் ஆடம்பர கூட்டுத் திருப்பலியை, பெங்களூரு உயர்மறை மாவட்ட பேராயர் பெர்னார்ட் மோரஸ் நடத்துகிறார். மாலையில், அன்னையின் தேர் பவனி நடக்கிறது. இரவில், நற்கருணை ஆசீரை தொடர்ந்து, அன்னையின் கொடி இறக்கப்படுகிறது.ஆலயத்திலிருந்து புறப்படும் தேர், சிவாஜி நகர் பஸ் நிலையம், பிராட்வே சந்திப்பு, ரஸ்ஸல் மார்க்கெட் பகுதி வழியாக ஆலயத்தை மீண்டும் அடைகிறது.