பதிவு செய்த நாள்
10
செப்
2014
12:09
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், இந்திரா நகரில் உள்ள ஆகாய கன்னியம்மன் கோவிலில், நேற்று முன்தினம், தீமிதி திருவிழா நடந்தது. காஞ்சிபுரம், ஆலடி தோப்பு தெரு, இந்திரா நகரில், ஆகாய கன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆடி திருவிழாவும், 10ம் ஆண்டு தீமிதி திருவிழாவும், கடந்த வியாழக்கிழமை துவங்கியது. அன்று காலை, காப்பு கட்டுதல், பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடந்தன.வெள்ளிக்கிழமை மாலை, விளக்கு பூஜை நடந்தது. மூன்றாம் நாளான திங்கள்கிழமை காலையில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்; மதியம் 1:00 மணிக்கு கூழ்வார்த்தல்; மாலை 4:00 மணிக்கு ஊரணி பொங்கல் ஆகியவை நடைபெற்றன. அதை தொடர்ந்து, இரவு 7:00 மணியளவில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில், நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், அக்னி குண்டத்தில் இறங்கி, தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவு 9:00 மணிக்கு, ஆகாய கன்னி அம்மன் அலங்கரிக்கப்பட்டு, திருவீதியுலா நடைபெற்றது.