துறையூர்: துறையூர் அடுத்த பெருமாள்பாளையத்தில் உள்ள சிவன், விஷ்ணு கோவிலில் வருடாபிஷேக விழா நடந்தது. பெருமாள்பாளையத்தில், சிவகாம சுந்தரி சமேத செவ்வந்தி நாதேஸ்வரர், ஸ்ரீதேவி பூதேவி சமேத பூலாநேரி வரதராஜபெருமாள் இணைந்த சிவன், விஷ்ணு கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, சிவன் கோவிலில் விக்னேஸ்வர பூஜை, பஞ்ச கவ்யம், வருண ஹோமம், சிவகாம திருமுறை பாராயணம் செய்து தீபாராதனை நடந்தது. 9.30 மணிக்கு விஷ்ணு கோவிலில் சங்கல்பம், கலச பூஜைகள், பஞ்சஸீக்த ஹோமம், வேத திவ்ய பிரபந்த சாற்று முறை செய்து தீபாராதனை நடந்தது. வருடாபிஷேகத்தில் சிவன் கோவிலில் அருள்நந்தி சிவாச்சாரியாரும், விஷ்ணு கோவிலில் ரமேஷ் பட்டரும் சர்வசாதகம் செய்தனர்.