நாகர்கோவில் : முளகுமூடு புனித மரியன்னை ஆலய திருவிழா கடந்த 6-ம் தேதி கொடிய÷ற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி புதுப்பிக்கப்பட்ட ஆலயத்தை கோட்டார் பிஷப் பீட்டர் ரெம்ஜியூஸ் அர்ச்சித்து திறந்து வைத்தார். விழாவில் தினமும் திருப்பலி, ஜெபமாலை, மறையுரை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் 6-வது நாளான நேற்று இரவு ஏழு மணிக்கு சகாய அன்னையின் நவநாள் மற்றும் தேர்பவனி நடைபெற்றது. 14-ம் தேதி அன்னையின் தேர்பவனி நடக்கிறது. 15-ம் தேதி காலையில் குடும்ப விழா சிறப்பு திருப்பலி நடக்கிறது.