Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் ... கோவில் விக்ரகங்களை பாதுகாத்திட ரூ.50.05 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 செப்
2014
02:09

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சின்னமட்டாரப்பள்ளியில், நாளை, வீரஆஞ்சநேயர் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம், சின்னமட்டாரப்பள்ளி கிராமத்தில் உள்ள ராஜிலு மலை கோவிந்தராஜிலு சுவாமி மலையில் எழுந்தருளியுள்ள வீர ஆஞ்சநேயர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி, இன்று காலை, 6 மணிக்கு கணபதி பூஜை, கலச பூஜை, கங்கணம் கட்டுதல், நவக்கிரக ஹோமம், ருத்ரஹோமம், துர்கா ஹோமம், சுதர்சன ஹோமம், சண்முக ஹோமம், சப்தநாகஹோமம், ருத்ரபாராயணம், பஞ்ச சுக்தபாராயணம், லகுபூர்ணாபுதி ஆகிய நிகழ்ச்சிகளுடன் துவங்குகிறது. அதை தொடர்ந்து, ஸ்வாமி சிலைகள் மகா அஷ்டபந்தனம் நடக்கிறது. அன்று மாலை, 6 மணிக்கு தம்பதியர் பூஜை, கணபதி ஹோமம், சப்த நாக ஹோமம், தன்வந்திரி ஹோமம், லட்சுமி நாராயண ஹோமம், சுதர்சன ஹோமம், ராமஆஞ்சநேயர் ஹோமம், லகுபூர்ணாயுதி ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

தொடர்ந்து, நாளை காலை, 6 மணிக்கு, ஹோமங்களும், காலை, 7 மணிக்கு, சின்னமட்டாரப்பள்ளி கங்கம்ம கோவிலில் இருந்து, 101 பால் குடத்துடன், 158 கலசங்களுடன், பூ மிதித்து, சாமி மலைக்கு செல்லுதல், காலை, 10.30 மணி முதல், 12 மணிக்குள், 101 பால்குட மகா கும்பாபிஷேகம், அலங்காரம், ஆராதனை, தீர்த்த பிரசாதம் வழங்கப்படும். பகல், 1 மணிக்கு அன்னதானம் வழங்கப்படும். மதியம், 2 மணிக்கு மலை மேல் திருப்பதி தெனாலி வாஸ்தவராலு நாகமணி பாகவதாரணி குழுவினரால், தெலுங்கு அரிகதை நடைபெறும். இரவு, 7 மணிக்கு, கோவிந்தராஜிலு சுவாமி ரத உற்சவம், வாணவேடிக்கை, கேரளா செண்டை மேளம், பம்பை, பலகை, சிலம்பாட்டம், கோலாட்டம் சிறப்பாக சுவாமி உற்சவம் ஊருக்குள் உலா வருகிறது. 14ம் தேதி காலை, 7 மணிக்கு சின்னமட்டாரப்பள்ளி கிராமத்தில் எழுந்தருளி இருக்கும், கங்கம்மா, சவுடேஸ்வரி, காளியம்மா, பூஜைகள், ஸ்வாமி உற்சவம் இசை வாத்தியங்களுடன், மாவிளக்கு தட்டுகளுடன் ஊருக்குள் உலா வருகிறது. பகல், 12 மணிக்கு கங்கம்மா கோவில் அருகில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை, சின்னமட்டாரப்பள்ளி கிராம பொதுமக்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் மாசி மாத பிரம்மோத்சவத்தையொட்டி நேற்று பந்தகால் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சேஷாத்திரி  ஆசிரமத்தில்,  சேஷாத்திரி மகானின் 156 ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar